Loading...
நாட்டின் சுபீட்சத்தை விரும்பாத வெளிச்சக்தியொன்று இருக்கின்றது. இந்த சிறு கும்பலுக்கு பின்னணியில் இருக்கும் அந்த சர்வதேச சக்தியை அடையாளம் காணவேண்டும்.
அத்துடன் இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம் மக்களின் கலாசாரத்தை ஒழிக்க சிலர் முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் முஸ்லிம் சமூகத்தில் இருந்து வருகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
Loading...
பாராளுமன்றத்தில் இன்று கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
Loading...