பொதுவாக மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நாம் எழுதும் வாக்கியத்தில் உள்ள இலக்கண பிழைகள், சொற் பிழைகளை சரி செய்யும்.
இப்போது இதை இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பழைய சொற்கள் கொண்ட வாக்கியங்களை மேம்படுத்த பரிந்துரைகள் வழங்கும். உங்கள் வாக்கிய அமைப்பை இன்னும் செழுமையாக்கும்.
நம்முடைய வேர்ட் டாக்குமெண்ட் வடிவமைப்பை மேலும் அழக்காக்க, டேபிள்களை சேக்க ஆலோசனை வழங்கும்.
இது முதலில் ஆன்லைனின் எம்.எஸ்.வேர்டை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும்.
ஜூன் மாதம் இதனுடைய டெஸ்ட் வெர்சன் பயன்பாட்டுக்கு வருகிறது. இலையுதிர் காலத்தில் பரவலாக அனைவருக்கும் கிடைக்கும்.
எம்.எஸ் வேர்ட் இது குறித்து ப்ளாக்போஸ்ட்டில் விவரித்துள்ளது, “செயற்கை நுண்ணறிவால் மட்டுமே எதையும் செய்துவிட முடியாது. மனிதர்களின் படைப்பாற்றல் தேவை.” என்கிறது.
கணினி பயன்பாட்டாளர்களிடையே மிகவும் பிரபலமான ‘மைக்ரோசாப்ட் பெயிண்ட்’ மென்பொருளை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் என்னும் இயங்குதளம்தான் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) உலகின் பெரும்பாலான கணினிகளில் இயங்கி வருகிறது.
எனவே, கணினிகளை முதல் முறையாக இயக்குபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மென்பொருளாக காலம் காலமாக எம்.எஸ் பெயிண்ட் இருந்து வருகிறது.
இந்நிலையில், எம்.எஸ் பெயிண்டை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதாக கடந்த 2017ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் முதல் முறையாக அறிவித்தது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே அம்முடிவு கைவிடப்பட்டது.
இந்நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட10ஆவது பதிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில், எம்.எஸ் பெயிண்டின் நிலை என்ன ஆகுமென்று அதன் பயன்பாட்டாளர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.
இந்நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்படுத்த பதிப்பில் எம்.எஸ் பெயிண்ட் நீக்கப்படவில்லை என்று அந்நிறுவனத்தை சேர்ந்த மூத்த மென்பொறியாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.