Loading...
சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் கடந்த ஞாயிறு மாலை உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
42 வயதான அந்த நபர் தண்டம் செலுத்த பணம் இல்லாததால் கடந்த இரு நாட்களாக லூசெர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்பு காவல் மையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
Loading...
இந்நிலையில் திடீரென்று அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கமராவில் இதை அங்குள்ள அதிகாரிகளும் பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் சுதாகரித்து நடவடிக்கை எடுக்கும் முன்னர் அந்த நபர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Loading...