Loading...
பூட்டியிருந்த வீடொன்றிலிருந்து அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா – மன்னார் வீதி, சாளம்பைக்குளம் பகுதியில் இந்த ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே குறித்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Loading...
இதன்போது, குறித்த வீட்டிலிருந்து அச்சுப்பிரதி செய்து லெமினேட் செய்யப்பட்ட பதினைந்து அடையாள அட்டைகள் மற்றும் சில ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
குறித்த ஆவணங்களை, பூவரசங்குளம் பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, இது குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...