Loading...
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினரை பிணையில் விடுதலை செய்யுமாறு கூறி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக வழங்க முற்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பலர் அன்றாடம் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்து இத்தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரியவந்தததையடுத்து, சந்தேகத்தின் பேரில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...