Loading...
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட செயலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மெழுகுதிரி ஏற்றி உயிர்நீத்த உயிர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.
அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பதாகையில், உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் உயிர்நீத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரஜைகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை என பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...