பாகிஸ்தானின் இரண்டாவது பெருநகரான லாகூருக்கு அருகே சற்று முன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் தகவல்களை மேற்கோளிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த குண்டுவெடிப்பு அங்குள்ள முஸ்லிம்களின் பழம்பெரும் கோவில் ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் வாகனம் ஒன்றின்மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் உள்ளூர் செய்தி ஒளிபரப்பு ஊடகமான GEO செய்திச் சேவையில் கூறப்பட்டுள்ளது.
தென்னாசியாவின் பழம்பெரும் முஸ்லிம் கோவில்களில் ஒன்றான டார்பர் சூஃபி ஆலயத்திற்கு அருகே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.நாடு முழுவதும் ரமளான் மாத நோன்பு நிகழ்ந்துவரும் நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான லாகூரில் உள்ள பண்டைய வாலட் நகரத்தில் இந்த சூஃபி கோவில் அமைந்துள்ளது.
முஸ்லிம்களின் இரு பிரிவினரான சுன்னி மற்றும் ஷியா மக்கள் தத்தமது பாரம்பரியங்களுடன் ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கில் இந்த கோவிலில் கூடுவதாக கூறப்பட்டுள்ளது.இதேவேளை இந்த கோவிலில் கடந்த 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.