Loading...
தலதா மாளிகையின் பாதுகாப்பிற்காக இரண்டு புதிய ஸ்கானர் இயந்திரங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
உடனடியாக இரண்டு புதிய ஸ்கானர் இயந்திரங்களை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர், அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் தியவடன நிலமே திலங்கே தெலே பண்டார ஆகியோர் ஸ்கானர் இயந்திரங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியிருந்தனர்.
Loading...
தலதா மாளிகையின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு இயந்திரங்கள் கோரப்பட்டிருந்தன.
மத்திய மாகாண ஆளுனர் நிலுகா ஏக்கநாயக்கவும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...