அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் செல்போன் பேசிக்கொண்டிருந்த மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படகின்றது.
சென்னை அயனாவரத்தில் வடக்கு மாட வீதியில் ராம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவரது மகள் தீபிகா (16) நேற்று இரவு தனது வீட்டு மாடியில் இருந்து கொண்டு செல்போனில் பேசியுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மாணவியை பெற்றோர் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இதனையடுத்து K2 அயனாவரம் காவல் நிலையத்தில் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செல்போனில் பேசியபோது நிலை தடுமாறி தான் விழுந்தாரா? அல்ல வேறு ஏதும் பிரச்சனை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.