Loading...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீன விஜயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்த விஜயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர், வெளிவிவகார அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் அடிப்படையில் மஹிந்த சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
Loading...
எனவே, மஹிந்தவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி முதல் ஒரு வார காலம் மஹிந்த சீனாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
Loading...