கத்தோலிக்க தேவாலய விதிமுறைகளில் திருத்தந்தை பிரான்சிஸ் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறும்பட்சத்தில், அதுகுறித்து முறைப்பாடு செய்ய வேண்டியது கட்டாயமானது என திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க தேவாலயங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் சுற்றறிக்கை ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில், ‘கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில், அதுகுறித்து அறிந்தவர்கள் சம்பந்தப்பட்ட தேவாலயத்தின் தலைமையிடம் முறைப்பாடு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
மேலும், இதற்காக ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இதுதொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காக பிரத்தியேக அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இந்த அமைப்பினை உலகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் 2020-ம் ஆண்டுக்குள் கட்டாயமாக அமைக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.