உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிமின் மகளின் இரத்த மாதிரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.அதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறன்று ஷங்ரி–லா நட்சத்திர விடுதியில் மேற்கொள்ளப்பட்ட இரு குண்டுத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 36பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் அங்கு குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களில் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாசிமும் ஒருவர் என்றும் அவர் அந்த தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்டது.எனினும் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர் அவர் இல்லையென புலனாய்வு தகவல்கள் தெரிவித்திருந்தன.
இதனை உறுதி செய்வதற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹரானின் சகோதரியின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மானித்திருந்தனர்.அவரை கொழும்பிற்கு அழைத்து வரவும் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்தது.
இவ்வாறான நிலையில் சாய்ந்தமருது தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் சஹாரானின் மகளின் இரத்த மாதிரியை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.