யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள் விடுதலை தொடா்பாக பேரினவாதி மைத்திரியை சந்திக்க சென்ற மாணவா்களை சந்திப்பதாக கூறிவிட்டு மைத்திரி ஏமாற்றிவிட்டதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரர்களுடைய புகைப்படம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், இனஅழிப்பு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த மாணவா்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் மைத்திரியை சந்திக்க சென்ற போதும் மைத்திரி கண்டியில் பிறிதொரு நிகழ்வுக்கு சென்றமையினால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை தொடர்பிலேயே ஜனாதிபதிக்கும் மாணவ பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.