Loading...
இலங்கையில் எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைகளை சீர்திருத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Loading...