Loading...
கனடாவின் வேலையின்மை வீதம், கடந்த 42 ஆண்டுகளின் அதி குறைந்த அளவினை எட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 5.8 ஆக இருந்த வேலையின்மை வீதம், கடந்த மாதம் 5.7 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது, கடந்த 1976ம் ஆண்டுக்கு பின்னர், கனடாவின் அதி குறைந்த வேலையின்மை வீதமாகும்.
Loading...
ஏப்ரல் மாதம், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில், 73 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் முழுநேரமானவை ஆகும்.
இவ்வெண்ணிக்கைள், கடந்த 24 ஆண்டுகளில் எதிர்கொள்ளப்படும் அதிக மாதாந்த வேலைவாய்ப்புக்கள் அதிகரிப்பு என, கனடிய புள்ளி விபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவித்துள்ளன.
Loading...