Loading...
இராணுவ டிபென்டர் வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கிதுல் உதுவ, 10 ஆம் கட்டையில் இடம்பெற்ற குறித்த விபத்தில், மொரவெவ பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த குறித்த இராணுவ டிபென்டர் வாகனம் பாதையை விட்டு விலகி புரண்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக, பாதையிலிருந்து சறுக்கியதன் காரணமாகவே, குறித்த டிபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Loading...
இவ்விபத்தில், ஆர்.எம். தரங்க ரத்நாயக்க (30) எனும் இராணுவ வீரர் பலியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Loading...