அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் சாமி கம்கர், கணனி சம்மந்தமான விடயங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர் கணனியை வெகு சுலபமாக ஹேக் செய்ய ஒரு பொருளை கண்டுபிடித்துள்ளார்.
PoisonTap என அதற்கு பெயர் வைத்துள்ள அவர் இதை Raspberry Pi Zero என்ற வன்பொருளை வைத்து உருவாக்கியுள்ளார்.
இதனை USB-யுடன் இணைத்து கணனியை எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்திருந்தாலும் அதை உடைத்து ஹேக் செய்ய முடியும் என்பது முக்கிய விடயமாகும்.
மேலும் இதன் மூலம் மெயில் கணக்குகள், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் கணக்குகளையும் சுலபமாக ஹேக் செய்ய முடியும்.
கணனியில் வெப் பரவுசர் ஆக்டிவாக இருக்கும் போது மட்டும் தான் இதை செயல்படுத்த முடியும்.
உதாரணத்துக்கு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் உணவு இடைவெளி நேரங்களில் தங்கள் கணனியை வெறும் லாக் மட்டுமே செய்து விட்டு போவார்கள். அந்த சமயங்களில் அதை PoisonTap மூலம் ஹேக் செய்யலாம்.
இந்த PoisonTapன் விலை வெறும் $5 அதாவது 340 ரூபாய் மட்டும் தான். எப்படியோ இது தீய நோக்கத்துடன் கணனியை ஹேக் செய்ய நினைப்பவர்கள் கைக்கு போகாமல் இருந்தால் சரி!.