நடராஜா ரவிராஜன் 10வது நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ். சாவகச்சேரி பகுதியில் அமைக்கப்பட்ட அவரது உருவச்சிலையொன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வானது, ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் தென்மராட்சி பிரதேச செயலகத்தின் முன்பாக நாளை மறுதினம்(20) நடைபெறவுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உருவச்சிலையினை எதிர்க்கட்சி தலைவரான இரா.சம்பந்தனால் திறந்து வைக்கப்படவுள்ளதுடன், அதன் பின் நினைவு கூட்டமானது, யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நினைவுக் கூட்டத்தில் அன்னார் குறித்த நினைவுரைகளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், மற்றும் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் தேசிய சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்தன், செல்வம் அடைக்கலநாதன், மதியாபரணம் சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட மூத்த அரசியல்வாதி வீ.ஆணந்தசங்கரி எனப்பல தமிழ் அரசியல்வாதிகள் பேருரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.