அமெரிக்காவின் பெறுமதி மற்றும் சர்வதேச ஆணைகளை ரஷ்யா மீறுமாயின் அதற்கு டொனால்ட் ட்ரம்ப் பதில் சொல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சமகால ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சமகால ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதி விஜயமாக ஜேர்மன் சென்றுள்ளார். இதன்போது ஜேர்மர் அதிபர் அஞ்சலா மேர்கலை சந்தித்து உரையாடினார்.
பின்னர் பெர்லினில் ஊடகவியலாளர்களை சந்தித்த பராக் ஒபாமா,
ரஷ்யாவினால் அமெரிக்காவின் பெறுமதி மற்றும் சர்வதேச ஆணைகளை மீறப்படுமாயின் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக இருக்கும் டொனால் ட்ரம்ப் அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உண்மையான அரசியல் ஓட்டத்தில் ரஷ்யாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் டொனால்ட் ட்ரம்ப்பினால் இலகுவாக கணக்கெடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2008ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜேர்மனுக்கு செல்லும் போது பெர்லின் நகரில் அவருக்கு பிரபலங்களினால் சிறப்பான வரவேற்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதில் இலட்சக்கணக்கான ஜேர்மன் மக்களினால் ஒபாமா வரவேற்கப்பட்டதனை காண முடிந்துள்ளன.
எனினும் 8 வருடங்கள் கடந்து ஒபாமா ஜனாதிபதி பதிவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் இறுதியாக ஜேர்மனுக்கு சென்ற அவரை, வரவேற்க சிறியளவிலான கூட்டம் ஒன்றே வருகை தந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது