Loading...
பெண்களுக்கு எதிரான எண்ணங்களை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது என ஐஸ்வர்யா தனுஷ் கூறியுள்ளார்.
பெங்களூரில் உலக பெண்கள் அமைப்பின் சார்பாக அவனுக்காக அவள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஐ.நா பெண்கள் நலனுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பெண் குழந்தைகளின் நலனுக்கான முயற்சிகள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தொடங்க வேண்டும்.
Loading...
குழந்தைகளின் நலன் குறித்து அவர்கள் வளரும் போதே புரிய வைப்பது நமது கடமையாகும், ஆண்- பெண் இருவரும் சமம் என்பதை புரிய வைக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிராக இருக்கும் எண்ணங்களை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது.
பெண்கள் மீதான தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்த, எதிர்மறையான எண்ணங்களை முதலில் மாற்றுவது அவசியமாகும் என்று பேசியுள்ளார்.
Loading...