இலங்கை நாட்டுக்கு சென்று நீண்டகாலம் வாழ விருப்பும் மூத்த வெளிநாட்டு குடிமக்களுக்காக கனவு இல்லம் விசா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்களின் கனவு இல்ல திட்டத்துக்காக தரப்படும் வீசாவால் இது கனவு இல்ல வீசா என கூறப்படுகிறது.
வெளிநாட்டு முதியவர்கள் மீது அன்பாகவும் கருணையோடும் இருந்து அவர்களுடம் இணைந்து வசிக்கும் அழகிய விடயத்தை இதன் மூலம் இலங்கை மக்கள் பெற முடியும் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
55 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் யாரும் இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்
இத்திட்டத்தில் இணைய விரும்புவர்கள் 15,000 அமெரிக்க டொலர்களை அல்லது அதற்கு இணையான வெளிநாட்டுப் பணத்தை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றின் வைப்பு நிதியாக வைக்க வேண்டும்.
இங்கு வந்து தங்க விருப்பும் வெளிநாட்டவருக்கு நல்ல சொகுசான வசதிகள் கொண்ட வீடுகள் அமைத்து தரப்படும்.
இங்கு வந்து தங்குபவர்கள் எந்த தவறான செயலையோ சட்டவிரோதமான காரியங்களையோ நிச்சயம் செய்யக்கூடாது.
இந்த விசாவை பெற என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை விசா விண்ணப்ப பத்திரத்துடம் சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் / பயண ஆவணத்தின் அத்தாட்சிப்படுத்திய பிரதிகள் நிச்சயம் தர வேண்டும் மற்றும் இலங்கையில் தங்கியிருக்க இயலுமென்பதை நிரூபிப்பதற்கான நிதி நிலைமையைக் காட்டுகின்ற வங்கி சான்றிதழின் பிரதிகள் விண்ணப்ப பத்திரத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப பத்திரத்தின் பிரதியை இணையம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வெளிநாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் சென்று வாங்கி கொள்ளலாம்.