அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகையும் மொடல் அழகியுமான மர்லின் மன்றோ அணிந்த உடை ஒன்று தற்போது 72 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மட்டுமின்றி உலக வரலாற்றில் நீங்காத இடம்பெற்ற நடிகையான மர்லின் மன்றோ அவருக்கென தனி இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியுடன் மர்லின் மன்றோவுக்கு ரகசிய தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், கடந்த 1962ம் ஆண்டு ஜனாதிபதியான ஜான் எஃப் கென்னடியின் 45-வது பிறந்த நாளில் பங்கேற்ற மர்லின் மன்றோ ஒரு ஆடம்பரமான உடையை அணிந்திருந்தார்.
பின்னர், மேடையில் ஏறிய மர்லின் மன்றோ ‘Happy Birthday Mr. President’ என்ற வாழ்த்தை அவர் பாடலாகவே பாடி அசத்தினார்.
இந்நிகழ்வு நடைபெற்ற 3 மாதங்களுக்கு பிறகு அளவுக்கு அதிகமான போதை மருந்தை எடுத்துக்கொண்ட விளைவாக மர்லின் மன்றோ உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, 1963ம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி ஊர்வலம் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ஜான் எஃப் கென்னடியின் பிறந்த நாள் நிகழ்ச்சியின்போது மர்லின் மன்றோ அணிந்திருந்த அந்த ஆடை தான் தற்போது ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
சுமார் 2,500 படிகங்கள் பதிக்கப்பட்ட அந்த ஆடையை Ripley’s Believe It or Not என்ற அருங்காட்சியகத்தின் உரிமையாளர் 4.8 மில்லியன் டொலருக்கு(71,97,12,000 இலங்கை ரூபாய்) வாங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.