குருணாகலின் பல இடங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் பெரும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. தற்போது அங்கு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இப்படியான சந்தர்ப்பத்தில் மக்கள் பொறுமையை காக்க வேண்டுமென அரசும், அரசியல்தலைவர்களும், மத தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம், இளைஞர்களே சட்டத்தை கையில் எடுக்காதீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் பொறுமையாக செயற்பட வேண்டும், மோசமான செயற்பாடு வெளிநாட்டு சக்திகளிற்கும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளிற்கும் வாய்ப்பாகிவிடும் என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கோரியுள்ளார்.
நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் முஸ்லிம்களின் உடைகளிற்கு பெரும் சேதம் ஏற்பட்டது. நேற்று நிக்கரவெட்டிய பகுதியில் நடந்த வன்முறையால் முஸ்லிம் மக்கள் வயல் நிலங்கள், காடுகளிற்குள் தஞ்சம் புகுந்ததாக செய்திகள் வெளியாகின.