பவானி அழகான இளம்பெண் கணவர் சேகரன் குவைத்தில் தனியார் நிறுவனத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்.
மனைவி சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தனது மாமனார்,மாமனாருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
பவானி பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பார். இதனால் சேகரன்அப்பா அம்மா பவானிக்கு நிறைய கெடு பிடிகள் விதித்தனர். கோவிலுக்கு போவதாக இருந்தாலும் மாமியார் கூடவே போவார்.
கொஞ்சம் சந்தேகப் புத்தியும் அந்த அம்மாவிற்கு உண்டு. ஆனால் பவானி நல்ல பெண் எந்த வம்பு தும்புவிற்கும் போக மாட்டார்.
அன்று அடையார் இந்திரா நகரில் தனது தோழியின் வீட்டில் குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி. மாமியாரிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று விட்டார்.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே பஸ் ஏறுவதற்காக காத்திருந்தார். அன்று ஆட்டோ டிரைவருடன் ஏறபட்ட தகராறில் பஸ் டிரைவர்கள் ஆங்காங்கே பஸ்களை நிறுத்தி விட்டு போராட்டத்தில் இறங்கி விட்டனர்.
ஆட்டோ டிரைவர்களும் ரகளையில் ஈடுபட்டனர்..! திகைத்துப்போனார் பவானி. அப்போது ஒரு இளைஞன் தன்னை அறிமுகப் படுத்திகொண்டு பவானியுடன் பேசினான்.
இன்று முழுவதும் பஸ் ஓடாது நானும் அடையாறு தான் போகிறேன். நீங்கள் என் தங்கைமாதிரி வாங்க ட்ராப் பண்றேன் என்று கூற அந்த அப்பாவி பவானியும் அவனது பைக்கில் ஏறிவிட்டார்.
மிக டீசண்டாக உட்கார்ந்தாள். தோழி போன் செய்து எங்கே இருகிறாய் என்று கேட்க அனைத்து விவரங்களையும் கூறி ஒரு அண்ணன் லிஃப்ட் கொடுத்தார் வந்துகொண்டிருக்கிறேன் என்று கூறினாள் பவானி.
பைக் போய்கொண்டிருந்தது. விதி பின்னால் விரட்டிக்கொண்டு வந்தது…ஒரு டேங்கர் லாரி ரூபத்தில்..!
நந்தனம் அருகே செல்லும் போது அந்த டேங்கர் லாரி சற்றும் எதிர்பாராமல் கட்டுப்பாட்டை இழந்து பவானி சென்ற பைக் மீது மோதி அரைத்து சட்னியாக்கி யது.
ஸ்பாட்டிலேயே இருவரும் துடிதுடித்து செத்துப் போனார்கள்..! போலீஸ் இருவீட்டார் அழைப்பு கொடுக்க பதறியபடி ஓடிவந்தார்கள் சேகரின் அப்பா,அம்மா.! அந்த பெயரில்லா பையன் வீட்டிலும் கதறிய படி ஓடிவந்தார்கள்..!
பவானி அப்பா அம்மா உறவினர்கள் ஓடிவந்தார்கள். அந்தப் பையனுக்கும் பவனிக்கும் கள்ளக்காதல் என்று முடிச்சுப்போட்டதுதான் இங்கு திருப்பம்…!?
இரண்டு வீட்டிற்கும் அடிதடி வெட்டுக் குத்து என்று போனது..! அந்த பையன் வீட்டில் இந்தப்பொண்ணு யார்னு கூட எங்களுக்கு தெரியாது என்று கதறினார்கள்..!
பவானியின் தோழி தேவியும் நடந்த விஷயங்களைக் கூற யாரும் நம்பவில்லை…! பவானி கணவனும் அதைக் கள்ளக்காதல் என்றே நம்பினான்.
விளைவு ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு சேரவேண்டிய எந்த உரிமையும் அவளுக்கு கிடைக்கவே இல்லை..! சேகரனுக்கு அடுத்த மாதம் இரண்டாவது திருமணம்..!
அப்போ பவானி…அவள்தான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து செத்துப் போனாளே…!???
கொடுமை சகோதரிகளே முன் பின் தெரியாத ஆண்களிடம் லிஃப்ட் கேட்டு ஏறாதீர்கள். அழைப்பது எமனாகவும் இருக்கலாம்..!!