வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் புதையல் அகப்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி ஆலங்கேணியில் வயல் உழவு வேலையின் போது பழைய செம்பு ஒன்று அகப்பட்டது. பழைய புதையல் அது என்பதால், விவசாயி அதை கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்தார்.
அதற்குள் சில பண்டைய நாணயங்கள் இருந்ததாகவும், அது ஐம்பொன்னா வேறு உலோகமா என்பது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் தொழில்நுட்ப உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் மூலம் பிரதி திட்டமிடல் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, நேற்று (15)ம் திகதியே பிரதேச செயலரிடம் புதையல் ஒப்படைக்கப்பட்டது.
நேற்றையதினமே மாவட்ட செயலகத்தில் புதையல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட புதையல் ஒரு வாரத்தின் பின் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.