எயிட்ஸ் நோயாளி பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மருத்துவமனையில் பெண் ஒருவர் சிறுநீர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு அவரது சகோதரியும் அங்கு தங்கி இருந்துள்ளார்.
தான் ஒரு எச்.ஐ.வி நோயாளி என மருத்துவமனைக்கு வந்த இளைஞனிடம் பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நபர் தாம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணை மருத்துவமனையின் மேல் மாடிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தான் ஒரு நோயாளி என்று தெரிவித்தும் கூட அப்பெண்ணை, இந்த நபர் வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.