போதை மருந்து கும்பலுடன் தொடர்பா? என்பது பற்றி நடிகை சார்மி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு, லாடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சார்மி தெலுங்கு பட உலகிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ஏற்கனவே போதை மருந்து சப்ளை செய்து போலீசில் சிக்கிய தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது அவர்கள் நவதீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர்கள் பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட 12 பேர் பெயர்களை வெளியிட்டனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் குறித்து இதுவரை கருத்து சொல்லாமல் இருந்த சார்மி தற்போது முதல் தடவையாக பேசினார். அவர் கூறியதாவது:-
“போதை பொருள் கும்பலுடன் என்னை தொடர்புபடுத்தியது எனது வாழ்க்கையின் மோசமான கட்டம். நான் அதிகமாக அழுதேன். என்னை மட்டுமின்றி எனது மொத்த குடும்பத்தையும் இது பாதித்தது. எல்லோரும் சில மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். இப்படிப்பட்ட சட்டவிரோத செயலில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பிரச்சினையில் இருந்து சுத்தமாக நான் வெளியே வருவேன். எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று 18 வயதில் இருந்தே என்னிடம் கேட்டு வருகிறார்கள். எனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.”
இவ்வாறு சார்மி கூறினார்.