அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் குடும்பத்திற்காக 2 இலட்சம் வரையான கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு, அந்த நாட்டு குடிவரவு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (17) கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன.
மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்களை நாடுகடத்தக் கூடாது என்று வலியுறுத்தி 190,000 கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு குடிவரவு அமைச்சர் டேவிட் கொல்மனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நடேசலிங்கம்-பிரியா தம்பதி வாழ்ந்து வந்த அவுஸ்திரேலியாவின் பிலோலா சமூகத்தினர் இந்த கையெழுத்து திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.