ஹசலக ஹொலாங்கொட பிரதேசத்தில் பௌத்த இலச்சனையான தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட துணியில் ஆடை தைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்திருந்த இஸ்லாமிய பெண்ணை கைதுசெய்துள்ளனர். என்ற செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள்.
உண்மையில் இது தர்மசக்கரம்தானா என்று சற்று பகுத்தறிவுடன் யோசித்துப்பார்த்தால். இந்த சக்கரத்தை தவிர்த்து வேறு எந்த பௌத்த அடையாளமும் இந்த ஆடையில் இல்லை பொதுவாக பௌத்த சின்னங்கள் என்றால் அரசிலை, புத்த பகவானின் சின்முத்திரை மாதிரியான பௌத்த அடையாளங்கள் ஏதாவது இருக்கும்.
உண்மையில் இது கப்பலின் சுக்கான் போலவே உள்ளது (Ship wheel) ஏனென்றால் சக்கரத்தின் வட்ட வளைவுக்கு மேலுள்ள சக்கரத்தின் நீட்சியாக உள்ளபகுதி கைபிடித்து சுழற்றுவதற்கு ஏற்றவகையில் பெரிதாக உள்ளதை கவனியுங்கள்.
தர்மச்சக்கரத்தில் அப்படி கைப்பிடி போன்ற அமைப்பு இருக்கவேண்டியதில்லை. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கையின் அரச இலச்சினையில் உள்ள தர்ம சக்கரத்தை கவனிக்கவும்.
அந்த பெண் அணிந்திருந்த ஆடையில் இருந்த சக்கரம் கைபிடித்து சுழற்றும் பகுதி தெளிவாக பெரிதாக உள்ளதை கவனிக்கவும். படத்தில் இணைக்கப்பட்ட கப்பலின் சுக்கானையும் கவனிக்கவும்.