ஆஸ்திரேலியா தேர்தலில் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிற்கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 76 இடங்களில் வென்றாக வேண்டும். இந்த தேர்தலில் பருவ நிலை மாற்றம், வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி ஆகியவை முக்கிய பிரச்சினையாக எதிரொலித்தது. அதன் அடிப்படையில் பிரசாரம் செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் 1 கோடியே 64 லட்சம் பேர் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். 18 வயது நிறைவு அடைந்தவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.