மனைவியின் தகாத உறவை கண்டதால் அதிர்ச்சியடைந்த கணவன் மனைவியின் தலையை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி அடுத்த ஐகொந்தம் வெப்பாலம்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதி சேர்ந்த கோவிந்தராஜ்-கஸ்தூரி தம்பதியினருக்கு அரசு மற்றும் தமிழ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
கட்டிட தொழிலாளியான கோவிந்தராஜ், அருகே இருக்கும் கிராமங்களுக்கு சென்று கட்டிட தொழில் செய்து வருகிறார். தினமும் காலையில் வழக்கமாக பணிக்கு செல்லும் கோவிந்தராஜ், இரவு தான் வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோவிந்தராஜின் மனைவி கஸ்தூரியும், அவரது தம்பி சின்னசாமியும் சந்தித்து பழகுவதாக கோவிந்தராஜூக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், இதனை தெரிந்துகொள்ள நேற்று முன் தினம் வேலைக்கு செல்வது போல் சென்றுவிட்டு, திடீரென பாதி நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது அவரது மனைவியும், தம்பியும் தகாத உறவில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுபற்றி அப்போது ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் மனைவி கஸ்தூரியிடம்,சின்னசாமியின் பழக்கம் குறித்து பேசியுள்ளார். அதனை கஸ்தூரி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இன்று அதிகாலை மீண்டும் இதுகுறித்து விசாரித்துள்ளார், அப்போது உண்மையை கஸ்தூரி ஒப்புக்கொண்டு, என்னை வெட்டிவிடு என கூறியதாக கூறப்படுகிறது. உண்மையை ஒப்புக்கொண்டதும் கோபத்தை அடக்க முடியாமல் கோவிந்தராஜ், வீட்டிலிருந்த கத்தியால் கஸ்தூரியின் கழுத்து பகுதியில் 10ற்கும் மேற்பட்ட முறை வெட்டியுள்ளார்.
தாக்குதலை எதிர்பார்த்து காத்திருந்த மனைவி கஸ்தூரி வெட்டுவதை எதிர்காமல் அப்படியே இருந்துள்ளார். பாதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் அப்படியே நிலை குலைந்து கிழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இச்சம்பவத்தை அருகே இருந்த அவரது இரண்டு மகன்களும் நேரடியாக பார்த்துள்ளனர்.
இதனையடுத்து கோவிந்தராஜ் இரத்த கரையுடன் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, தனது இரு மகன்களையும் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கிராமத்திற்கு வந்து பெரும்பாலான வீடுகளுக்கு சென்று நான் எனது மனைவியை வெட்டிவிட்டேன்,என கூறிவிட்டு, பின்னர் அதே கிராமத்தில் உள்ள கடைக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் நான் என் மனைவியை கத்தியால் வெட்டி கொன்றுவிட்டேன் என கூறியுள்ளார்.
பின்னர், தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பர்கூர் பொலிஸ்நிலையம் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பொலிஸாரிடம் நான் எனது மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டேன். என்னை கைது செய்யுங்கள் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.
இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பர்கூர் பொலிஸார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பர்கூர் துணை பொலிஸ் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்த பின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
தகாத உறவு வைத்திருந்த மனைவியை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்ச சம்பவம் கிராமத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.