எஸ்டோனியா நாட்டில் பொதுமக்களுக்கு என இலவசமாக பேருந்து சேவையை முன்னெடுத்துள்ளது அந்த நாட்டு அரசாங்கம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்டோனியா தலைநகர் Tallinn அங்குள்ள பொதுமக்களுக்கு என இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியதுடன், பொது வாக்கெடுப்பும் மேற்கொண்டனர்.
இதில் சுமார் 75 சதவிகித மக்கள் இலவச பேருந்து சேவைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனையடுத்து தலைநகர் Tallinn நகரில் இலவச பேருந்து சேவை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சேவையை பெற 2 யூரோ கட்டணத்தில் அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொள்ள வலியுறத்தப்பட்டது.
இருப்பினும் வெளிநகரத்தவர்கள், சுற்றுலாப்பயணிகள் என எஞ்சியவர்கள் உரிய கட்டணங்களை செலுத்தி பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் குறித்த இலவச சேவையானது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் எஸ்டோனியா நாட்டின் மொத்தமுள்ள 15 கவுண்டிகளிலும் தற்போது இலவச பேருந்து சேவை அமுலில் உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் திகதி தொடங்கி அமுலில் இருக்கும் இந்த சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது எஸ்டோனியாவின் இந்த இலவச பேருந்து சேவையானது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் உள்ள சில நகரங்களில் முயசிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்டோனியாவின் இந்த திட்டம் வெற்றிபெற்றால் உலகில் பொதுமக்களுக்கு என இலவச சேவை வழங்கும் முதல் நாடு என்ற அந்தஸ்தை பெறும்.