இங்கிலாந்து நாட்டில் உள்ள நியூகேசில் நகரை சார்ந்த இளம்பெண்ணின் பெயர் ஜெட் பெய்லி ரீக்ஸ். இவர் அங்குள்ள பல்கலைக்கழத்தில் படித்து கொண்டு வந்த சமயத்தில்., இவரின் பக்கத்து வீட்டு இளைஞரான டேவிஸ் பேட்டன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில்., கடந்த 2017 ம் வருடத்தின் போது., ஜூலை மாதத்தன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஜேட்., விடுதியின் அறையில் படுத்து உறங்கி கொண்டு இருந்துள்ளார்.
அந்த நேரத்தில்., வீட்டிற்கு உள்ளே யாரும் எதிர்பாராத நேரத்தில் மறைமுகமாக நுழைந்த டேவிஸ்., உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஜேட்டை., உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் பலாத்காரம் செய்துள்ளார்.
உறங்கிக்கொண்டு இருந்த ஜேட் உறக்கத்தில் இருந்து எழுந்த சமயத்தில்., அவரது ஆடைகள் அனைத்தும் கலைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுமட்டுமல்லாது இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்., உறக்கத்தில் இருந்த சமயத்தில் தனக்கு யாரால் இந்த துரோகம் செய்யப்பட்டது என்று தெரியாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில்., மறைமுகமாக ஜேட்டிடம் பேச்சு கொடுத்த டேவிஸ் அவர் கற்பழித்ததை உறுதி செய்ததை அடுத்து., அவர் தனது காதலியை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து வைத்ததை அறிந்து கொண்டார். இதனையடுத்து டேவிஸ் தனது அலைபேசியில் இருந்து அந்த காட்சிகளை நீக்கிவிடவே., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., எந்த விதமான பலனும் இல்லாததால்., தனது காதலனை சிக்க வைப்பதற்காக அவனிடம் வழக்கம் போல பேச்சு கொடுத்து., அதனை தனது அலைபேசியில் சாமர்த்தியமாக பதிவு செய்து கொண்டார். பின்னர் இந்த தகவலை காவல் துறையினருக்கு தெரிவித்து., பின்னர் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில்., டேவிஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது குறித்த வழக்கு விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் வரவே., சுமார் 4 வருட சிறை தண்டனை அறிவித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார்.