இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய மொஹமட் சஹ்ரானுக்கு பல பில்லியன் ரூபாய்களை நிதியாக வழங்கியவர், ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் இப்ராஹிம் இன்ஷாஃப் என்று தெரியவந்துள்ளது.
தமது செப்பு தொழிற்சாலை மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை அவர், சஹ்ரானின் தௌஹீத் ஜமாத்தின் முன்னேற்றத்துக்காக வழங்கியுள்ளார்.
இந்த பணம் மூலம் தேசிய தௌஹீத் ஜமாத்தின் 17 பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் 4 பயிற்சி முகாம்களை நடத்தி செல்லவும், வாகனங்களை கொள்வனவு செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்கொலை தாக்குதலுக்கு நான்கு தினங்களுக்கு முன்னர், தனியார் வங்கி ஒன்றில் இருந்து பெறப்பட்ட தமது 350 லட்சம் ரூபாய் பணத்தையும், இன்ஷாஃப், சஹ்ரானின் சகோதரரான ரில்வானிடம் கொடுத்துள்ளார்.
புலனாய்வாளர்களுக்கு இந்தவிபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனினும் ரில்வான் தமது குடும்பத்தாருடன், சாய்ந்தமருதில் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.