Loading...
நம் குடும்பத்தில் இருக்கும் யாராவது ஒரு உருவம் கலந்து வீடுகளில் பிறப்பது அனைவரும் அறிந்ததே. இது ஒரு சில நேரங்களில் அவர்களுக்கே வியப்பை ஏற்படுத்தும்.
அதற்கு காரணம் உங்கள் அம்மா, அப்பா இருவரிடமிருந்தும் தரப்பட்ட தலா ஒரு ஜீன் நகலில் உருவானவர்தான் நீங்கள். ஆனால் அந்த ஜீன் வாழும் இடத்திற்கு தகுந்தாற்போல் கருவாக உருவாகும்.
Loading...
அந்த வழியில்தான் பல நோய்கள் ஒன்று போல் மற்றவர்களுக்கு இருக்கும். அப்படி எந்த வகையான நோய்கள் பரம்பரையாக அம்மா, அப்பவிடமிருந்து வரலாம் என தெரியுமா.
- பொதுவாக மார்பக புற்று நோய் அம்மாவின் குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கிறதா என பார்ப்போம். ஆனால் அப்பாவின் குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்று நோய் இருந்தால் அது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு உண்டு. ஆண் குழந்தைகளுக்கு மார்பக புற்று நோய் வருவது அரிது என்றாலும் , அவர்களின் அம்மாவின் ஜீனை அப்படியே தங்களது மகளுக்கு கடத்துவதாலும் பரம்பரையாக இந்த நோய் உண்டாகலாம்.
- சிலருக்கு 30 களிலேயே ஏன் 20 களிலேயே சர்க்கரை வியாதி தொடங்கிவிடும். இதற்கு காரணம் அவர்களின் குடும்பத்தில் யாருக்காவது இருந்திருக்கலாம். டைப் 1 சர்க்கரைவியாதி பெரும்பாலும் மரபு ரீதியாக வருவது.
- டைப்-2 சர்க்கரை வியாதி பெரும்பாலோனோர் உடல் பருமன் , வாழ்க்கை முறையால் வருவதென்று கூறினாலும் மரபணு காரணமாகவும் வரலாம். இதனை சரியாக சோதித்த பிறகு சிகிச்சை அளித்தால் தகுந்த பலன் தரும்.
- லாக்டோஸ் இன்டாலரன்ஸ் , குளுடன் அலர்ஜி போன்ற பால், கோதுமை, வேர்க்கடலை என எந்த உணவெடுத்தாலும் சிலருக்கு அலர்ஜி உண்டாகும். இதற்கு மரபணுதான் காரணம்.
- ஒரு சிலர் விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தாலும், அவர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் வேகன் டயட், மாரத்தானில் ஓடினாலும் குறையாது. இதற்கு மரபணுவில் வரும் மாற்றமே காரணமாகும். இது பரம்பரையாக வருவது.
Loading...