Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கனடாவிற்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒட்டாவாவில் இடம்பெறவிருந்த மாநாடொன்றில் பங்கேற்கும் வகையில் எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கனடாவிற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.
Loading...
இதன்போது கனேடிய பிரதமரையும் சந்தித்து பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.
எனினும், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ருடோவை சந்திக்க நேரம் கிடைக்காமை காரணமாகவே, ஜனாதிபதியின் கனடாவிற்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...