தென் ஆபிரிக்காவில் இரண்டு வெள்ளை ஆபிரிக்கர்கள், கருப்பினத்தவரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Willem Oosthuizen, Theo Martins Jackson என்ற இரு வெள்ளையர்கள் இனவெறியை தூண்டும் வகையில் 20 வயதான Victor Mlotshwa என்ற கருப்பின இளைஞரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்துள்ளனர்.
பின்னர், பெட்ரோல் ஊற்றுவோம், சவப்பெட்டியில் பாம்பை விடுவோம் என மிரட்டி குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இதைக்கண்ட பலர் இக்கொடூர செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும், குறித்த வீடியோ நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட Victor Mlotshwa நியாயம் வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2017 ஜனவரி 25ம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.மேலும், அதுவரை குற்றவாளிகள் இருவரையும் விசாரணை காவலில் வைக்கும் படி உத்தரவிட்டுள்ளது.