Loading...
பொதுவாக உடல் எடையை குறைப்பதுக்கு பலரும் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நம் உடல் எடையை குறைப்பதில் பிளாக் டீயின் பங்கு அதிகம் அது உங்களுக்கு தெரியுமா. அது மட்டுமில்லாமல் நம் உடலில் சேரும் தேவையில்லா கொழுப்புச் சத்துக்களையும் பிளாக் டீ குறைத்துவிடுகிறது.
Loading...
- டயட்டில் இருக்கும் பலரும் பிளாக் டீ தான் அதிகம் குடிப்பார்கள். அதற்கு காரணம் உடல் எடையை குறைப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு ஆற்றுகிறது.
- கேமல்லியா சினசிஸ் (Camellia sinensis) என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து பிளாக் டீ தயாரிக்கப்படுகிறது.
- கிரீன் டீ, வொயிட் டீ மற்றும் ஊலாங் டீ ஆகியவற்றை விட பிளாக் டீ தான் அதிக மணம் மற்றும் சுவை வாய்ந்தது, அதன் கருப்பு நிறத்திற்கேற்றவாறு அது பிளாக் டீ என்று அழைக்கப்படுகிறது.
- பிளாக் டீயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் எனர்ஜி அதிகரிப்பதுடன், ஸ்டாமினா அதிகரிக்கும். மேலும் அது உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
- இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு பிளாக் டீ உதவுகிறது.
Loading...