இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜெயவர்த்தனேவுக்கு மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி கிடைத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஐபிஎல் தொடர் அடுத்தாண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் கூட இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. போட்டிகளும் வரும் ஏப்ரல் 5 முதல் மே 21 வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை தேர்ந்தேடுப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சற்று முன்னே சென்று மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜெயவர்த்தனேவை அறிவித்துள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமித்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விரைவில் அங்கு பார்க்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அவர் தொடரின் போது பாதியில் விட்டுச் சென்றது, கோப்பையை தக்க வைக்க தவறியது உள்ளிட்ட காரணங்களால் பாண்டிங் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.