குருணாகல் வைத்தியசாலையின் பணிபுரியும் வைத்தியர் ஷாபி சஹாப்தீன் சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்தடை சத்திரசிகிச்சை செய்த குற்றச்சாட்டையும் அவர் எதிர்கொள்கிறார்.
நேற்று வைத்தியசாலையில் நடந்த நீண்ட விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியாலை பணிப்பாளர், உத்தியோகத்தர்களிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெற்றப்பட்டன.
8000 கருத்தடை சத்திரசிகிச்சைகளை அவர் மேற்கொண்டதாகவும், குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளர் முன்னிலையில், 8000 கருத்தடை சத்திரசிகிச்சை செய்ததை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
அறுவை சிகிச்சைகளிற்காக பணம் அறவிட்டது, குழந்தை விற்பனை, ஆவணங்களை மறைத்தது உள்ளிட்ட விவகாரங்களில் சந்தேகநபராக விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார்.