Loading...
பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக சமீபகாலமாக தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பேஸ்புக்கில் போலி கணக்குகளை உருவாக்கி தேவையற்ற மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேஸ்புக் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Loading...
கடந்த ஒக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளைவிட 2 மடங்கு அதிகம் ஆகும்.
Loading...