இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல என தெரியவந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பரிஸில் அமைந்துள்ள பாண்ட் டி லா அல்மா சுரங்கத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளவரசி டயானா (36), அவரது காதலர் டோட்டி ஃபேயட் (42) மற்றும் அவர்களது சாரதி ஹென்றி பால் (41) ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் மர்மமான கார் ஒன்று காணப்பட்டது. பின்னர் அது மாயமானதாகவும் பரிஸ் நகர பொலிஸார் அப்போது குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில் இளவரசி டயானாவின் மரணம் வாகன விபத்தால் ஏற்பட்டதல்ல. இந்த விபத்தை நேரில் பார்த்த ராபின் மற்றும் ஜாக் ஃபயர்ஸ்டோன் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தின் சில நிமிடங்கள் பின்னரே தங்கள் காரில் ஹொட்டலுக்கு சுரங்கம் வழியாக சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு காணப்பட்ட மர்ம கார் தொடர்பாக முறைப்பாடு செய்யச் சென்ற ராபினிடம், போதுமான ஆதாரங்கள் தங்களிடம் தற்போது சிக்கியுள்ளது.
அந்த கார் தொடர்பாக கவலை கொள்ள தேவையில்லை என அப்போது பரிஸ் நகர பொலிஸார் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பிரபலமான ஒரு பெண்மணி விபத்தில் இறந்துள்ளார், ஆனால் பொலிஸார் சாட்சியங்களை விசாரிக்க மறுத்திருப்பது தங்களுக்கு அப்போது வேடிக்கையாக இருந்தது எனவும் ராபின் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், லண்டனில் 2007ஆம் ஆண்டு, இளவரசி டயானா மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதும் ராபின் தம்பதிகளை அழைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஆனால் சில மாதங்களுக்கு பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, டயானாவுடன் கொல்லப்பட்ட அவரது காதலனின் தந்தை முகமது ஃபெய்ட் தொடர்பு கொண்டதாகவும் ராபின் தெரிவித்துள்ளார்.