Loading...
கிளிநொச்சி இரணைமடுசந்தியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இரணைமடு பகுதியை சேர்ந்த 62 வயதுடைய இராசேந்திரம் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் ரயிலிலேயே குறித்த முதியவர் மோதுண்டு பலியாகி உள்ளார்.
Loading...
இவ் விபத்தில் உடலின் மேற்பகுதி வேறாகவும், இடுப்புக்கு கீழ் பகுதி வேறாகவும் காணப்பட்டது.
இந்த நிலையில் ரயில் சேவை தாமதமடைந்ததுடன் சடலத்தை மீட்ட ரயில்வே அதிகாரிக்கள் சடலத்தை அடுத்த ரயில் நிலையத்தில் ஒப்படைத்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...