வடக்கின் சில பிரதேசங்களில் நாளை காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மின் விநியோக முறை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இவ்வாறு மின்சாரம் தடைப்படவுள்ளது.
அதற்கமைய, யாழில், இரும்புவேம்படி, மனோகரா, சங்களாவத்தை, தேவரையாளி, திக்கம், மட்டுவில், கல்வயல், முத்துமாரி அம்மன் கோவிலடி, சரசாலை வடக்கு, ஆகிய பிரதேசங்களிலும், கிளிநொச்சியில்,
நாச்சிக்குடா, நாகபடுவான், முழங்கவில், குமுழமுனை, பல்லவராயன் கட்டு, வெள்ளாங்குளம், மூன்றாம்பிட்டி, SLLI கணேஷபுரம், 651ஆவது படைப்பிரிவு முகாம், 652ஆவது அதிரடி படை முகாம், 2ஆவது அதிரடிப்படைமுகாம், நாச்சிக்குடா கடற்படை முகாம், இயாஸ் இடங்களிலும், வவுனியாவில், நெளுக குளத்தில் இருந்து இராசேந்திர குளம் வரைக்கும், மன்னாரில் முருங்கனிலிருந்து தலைமன்னார் வரை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாசன திணைக்களம், கமலாம்பிகை அரிசிஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், மன்னார் நீர்பாசனத் திணைக்களம், மன்னர் தொலைத்தொடர்பு நிலையம், மன்னர் வைத்தியசாலை, விசேட அதிரடிப்படை முகாம், வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, எருக்குப்பிட்டி பாம் கவுஸ், மீன்பிடிசமாசம், தலைமன்னார் கடற்படை முகாம், சீனத்துறைமுகம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைபடும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.