இன்றய நவீன வாழ்வில் மனிதர்களின் தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்கும் தானியங்கி கருவி உள்ளது.
இது கணினி யுடன் தொடர்பு கொண்ட ஒருமின் அனு இயந்திரம் ஆகும், இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கு நேரடியாக செல்லாமல், ATM- ல் எளிமையாக பணம் எடுக்கவும், மற்ற கணக்குக்கு பணம் அனுப்பவும் இது உதவுகிறது, அப்படி ATM பற்றியும் அதன் அட்டைகளை பற்றியும் நாம் அறியாத சில உண்மைகளை பார்ப்போம்!
ATM இயந்திரத்தை பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்:
பொதுவாக டெபிட் கார்டட்டின் ரகசிய எண் நான்கு எண்களாக இருக்கும்,இதற்கு காரணம் என்ன என்பதை என்றாவது யோசித்து பார்த்தது உண்டா? ஏன் 6 எண்களை வைத்து இருக்கலாம் அல்லவா? அதன் காரணத்தை பார்ப்போம்,
1. ATM இயந்திரத்தின் உருவாக்கத்திற்கு,இயக்கத்திற்கும் முன்னோடியாக இருந்த Adrian Ashfield, முதலில் 6 ரகசிய எண்களை தான் வைத்து இருந்தார்,பின் தன் மனைவியால் 6 எண்களை மனப்பாடம் செய்ய முடியவில்லை என்பதை அறிந்து 4 ஆக மாற்றினார்..இன்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் 6 எண்கள் கொண்ட ரகசிய எண் தான் இருக்கிறது.
2. ATM இயந்திரத்தை ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு மாதிரி அழைக்கிறார்கள், அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளில் ATM எனவும்,சில நாடுகளில் Automated Banking Machine எனவும் Cash Points எனவும் குறிப்பிடுகிறார்கள்.
3. உலகில் 1967ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் தான் முதன் முதலில் நடைமுறைக்கு வந்தது.1987 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் HSBC பேங்க் மூலம் இந்தியாவில் முதன் முதலில் ATM machine நடைமுறைக்கு வந்தது.2004 ஆம் ஆண்டு மிதக்கும் ATM-ஐ கேரளா அரசு கொண்டு வந்தது,மேலும் SBI வங்கி இதனை நிறுவியது.
4. பின் பகுதியில் மேக்னேடிக் ஸ்ட்ரிப்-ம், முன் பகுதியில் 16 இலக்கங்களை கொண்ட எண்களும் இருக்கும்,இந்த 16 எண்ணுக்கு பின் சில ரகசியங்கள் அமைந்து உள்ளன.
முதல் 6 எண்கள்- Issue Identity நான்கில் தொடங்கினால் Visa வகை அட்டை, ஐந்தில் தொடங்கினால் Master Card இது போல் 0 முதல் 9 வரை பல அட்டைகள் உள்ளன.
CARD VERIFICATION VALUE-அட்டையின் காலாவதி.
ஒரு வங்கி கணக்கை நாம் வேறு வங்கி ATM-ல் சென்று எடுத்துக் கொள்கிறோம்..இது எப்படி சாத்தியம்? Indian Bank,Indian Bank ல் தானே பணம் எடுக்க வேண்டும் என்று யோசித்து உள்ளீர்களா?
இதற்கு பெயர் தான் Settlement Funds,ஒரு வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும் பணம் வேறு வேறு வங்கியின் ATM இயந்திரமாக இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை..ஏனெனில் வங்கிகளுக்குள் Settlement Funds என்ற ஒரு பேச்சுவார்த்தை உள்ளது,அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாள் இரவும் வங்கிகளுக்குள் உள்ள கணக்குகளை முடித்துக் கொள்வார்கள்.
தற்போது தங்கம் வழங்கும் ATM இயந்திரங்கள் பல நாடுகளில் நிறுவப்பட்டு வருகிறது.