குருநாகலில் வைத்தியர் ஒருவர் கருத்தடை சிகிச்சையளித்ததாக கிளம்பிய பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் ஒர புதிய தகவலை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க.
2000 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் கண்டியில் இரண்டு வைத்தியர்கள் 6000 சிங்கள பெண்களிற்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பெரதெனியா வைத்தியசாலையில் பணியாற்றிய இரண்டு வைத்தியர்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டதாகவும், ஒரு வைத்தியர் தற்போது அம்பாறையின் கல்முனைக்கு இடமாற்றம் பெற்று சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
சிராஜ் என்ற வைத்தியரும், இன்னொரு பெண் வைத்தியருமே இதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும், அப்போதைய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கபில குணவர்த்தன ஓய்வு பெறும் கட்டத்தில் இருந்ததாகவும், அவருக்கு இதில் தொடரபில்லையென்றும் எம்.பி திசாநாயக்க தெரிவித்தார். அந்த பெண் வைத்தியர் இப்பொழுது காணாமல் போய்விட்டார்.
குழந்தை பிரசவித்த பின்னர், அந்த பெண்கள் இன்னொஐ குழந்தையை பிரசவிக்க விரும்பவில்லையென வைத்தியசாலையில் குறிப்பிட்டே சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக எம்.பி தெரிவித்தார்