வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
இப்படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் கம்போஸிங்கை ஏற்கனவே முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாடல்கள் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வழக்கமாக ஒரு பிரபல நடிகரின் பட பாடல்கள் அந்த படம் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் வெளியாகும். ஆனால், ‘தல 57′ மே மாதம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பாடல்களை ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.