கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய அரசாங்கங்களிடையே கூட்டுறவு ஒப்பந்தமொன்று நேற்று (28) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
இதுவரையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டுறவு ஒப்பந்தங்களில் இம்முறை இலங்கை துறைமுக அதிகார சபை 51% உரிமையை கொண்டிருப்பது இவ்வொப்பந்தத்தின் சிறப்பம்சமாகும். இப்புதிய முனைய செயற்பாட்டு நிறுவனத்தில் இலங்கை துறைமுக அதிகார சபை அதிகளவான உரிமையை கொண்டிருப்பதானது, இச்சபை தேசிய நலனில் கொண்டுள்ள அக்கறையை எடுத்துரைக்கின்றது.
அத்துடன் இம்மூன்று அரசாங்கங்களும் இக்குறித்த கூட்டுறவு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளின் அடிப்படையில், தங்களுடைய கலந்துரையாடல்களை முன்னெடுத்து கிழக்கு முனையத்தின் கொள்கலன்கள் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.