ஹட்டன் நல்லத்தண்ணி பகுதியில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி காமினி பெரேரா கூறியுள்ளார்.
சிவனொளிபாதமலை பருவ காலத்தில் ஹட்டன் நல்லத்தண்ணி வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருந்த பிலாஸ்டிக் மற்றும் பொலுத்தீன் குப்பைகளை சிரமதான முறையில் அகற்றிய போதே நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பிரதேசத்தில் தற்போது டெங்கு பரவியுள்ள நிலையில் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் சிவனொளிபாதமலை பருவ காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கு சென்ற நிலையில், டெங்கு நோயாளிகளும் வந்திருப்ப்பார்கள் எனவும்,.அவர்களின் நுளம்பு மூலம் டெங்கு பரவியிருக்ககூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சிரமதான பணியிய்ல் மாவட்ட சுகாதார சேவைகள் அதிகாரி சேணக தலகள, மத்திய மாகாண சுகாதார சேவைகள் மற்றும் மலேரியா அழிப்பு அதிகாரி பைசால் மற்றும் மஸ்கெலியா பிரதேச சுகாதார அதிகாரிகள் ,லிங் நெச்சுரல் ஸ்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி பிரிவினர் மற்றும் பாடசாலை மாணவர்களும்ள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.