Loading...
நாட்டில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து சுற்றுலாத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் குறைப்பதற்கான மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி சுற்றுலாத்துறையின் அனுபவமிக்க உலகளாவிய பிரதிநிதிகள் மூலம் 45 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்கு குறுகிய கால பொதுமக்கள் இணைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மற்றும் இலங்கையில் சுற்றுலா சின்னத்தை மீண்டும் பிரபல்யப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Loading...
இது தொடர்பில் 6 மாத காலப்பகுதி முழுவதும் விளம்பர பிரச்சார வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சினால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...